/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொஞ்சும் குரலால் ரூ.66 லட்சம் போச்சு சித்தோடு ரியல் எஸ்டேட் அதிபர் புகார்

ADDED : அக் 29, 2025 03:37 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோட்டை சேர்ந்தவர் வேல்முருகன், 58; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். சமூக வலைதளத்தில் இளம்பெண் அறிமுகமானார்.
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து அதிக வருவாய் பெற உதவுவதாக கொஞ்சும் குரலில் பேசியுள்ளார்.
மேலும் சமூக வலைதளத்தில் வரும் செயலியில் பணம் அனுப்ப அறிவுறுத்தியுள்ளார். வேல்முருகன் துவக்கத்தில், 50,000 ரூபாய் அனுப்பியுள்ளார்.
இதற்கு, 12,000 ரூபாய் கூடுதலாக, 62,000 ரூபாய் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளளது. இதனால் அடுத்தடுத்து, 66 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
இந்நிலையில் கொஞ்சம் பணத்தை செயலியில் இருந்து எடுக்க முற்பட்டுள்ளார். பணத்தை எடுக்க முடியாத நிலையில் செயலியும் மறைந்தது. அதிர்ச்சி அடைந்தவர் கொஞ்சும் குரலை தொடர்புகொள்ள முடியவில்லை.
அவரது புகாரின்படி ஈரோடு சைபர் க்ரைம் போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.