/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எண்ணமங்கலத்தில் ௨ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
/
எண்ணமங்கலத்தில் ௨ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
எண்ணமங்கலத்தில் ௨ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
எண்ணமங்கலத்தில் ௨ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ADDED : மே 18, 2024 01:07 AM
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலத்தை அடுத்த குரும்பபாளையம் மேடு, குசிலாம்பாறை பகுதியில், நீர்வள ஆதாரத்துறைக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளார். நீர்வள ஆதாரத்துறை சார்பில் அளவீடு செய்யப்பட்டு, பலமுறை ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் ஆக்கிரமிப்பை அகற்றாமல், சம்பந்தப்பட்ட நபர் விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் கிருபாகரன், அந்தியூர் தாசில்தார் கவியரசு மற்றும் வருவாய் துறையினர், இயந்திரம் மூலம் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.