/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருமூர்த்தி அணையில் இருந்து வட்டமலைக்கு தண்ணீர் திறங்க!
/
திருமூர்த்தி அணையில் இருந்து வட்டமலைக்கு தண்ணீர் திறங்க!
திருமூர்த்தி அணையில் இருந்து வட்டமலைக்கு தண்ணீர் திறங்க!
திருமூர்த்தி அணையில் இருந்து வட்டமலைக்கு தண்ணீர் திறங்க!
ADDED : டிச 31, 2024 06:59 AM
வெள்ளகோவில்: திருமூர்த்தி அணையிலிருந்து வட்டமலைகரை அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று, அமைச்சர் சாமிநாதனிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
வட்டமலை கரை ஓடை அணை நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பாலபூபதி, பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர் பாலசுப்பிரமணி, பி.ஏ.பி., நீரின் பாதுகாப்பு தலைவர் தங்கராஜ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உத்தம்பாளையத்தில் வட்டமலைக்கரை அணையில் இருந்து, 40 ஆண்டுகளில் இருமுறை மட்டுமே பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைப்பகுதியை ஒட்டியுள்ள, 30 கிராம மக்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை தீர்க்க வேண்டும். இதற்காக திருமூர்த்தி அணையில் இருந்து, பாசன கால்வாய் மூலம் வட்டமலை அணைக்கு தண்ணீர் விட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.