/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு அகற்றம்
/
புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 05, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி தாலுகா சிறுவலுார் உள்வட்டம், பொலவக்காளிபாளையம் கிராமம் பெரியார் நகரில், அரசுக்கு சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் ஒன்றரை ஏக்கரை ஏழு பேர் ஆக்கிரமித்திருந்தனர்.
இதை கடந்த, 2024ல் டிச.,31ல் வருவாய்த்துறையினர் அளவீடு செய்து கண்டறிந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் ஏழு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். உரிய கால அவகாசம் வழங்கியும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் கோபி தாசில்தார் சரவணன் உத்தரவுப்படி, சிறுவலுார் ஆர்.ஐ., மகேந்திரன், வி.ஏ.ஓ., ரேவதி மற்றும் கோபி போலீசார் அடங்கிய குழுவினர், பொக்லைன் இயந்திரம்
மூலம் ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர்.