/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதி பெறாமல்வைத்த பிளக்ஸ்,பேனர்கள் அகற்றம்
/
அனுமதி பெறாமல்வைத்த பிளக்ஸ்,பேனர்கள் அகற்றம்
ADDED : ஆக 22, 2025 01:17 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி பகுதியில், உரிய அனுமதியின்றியும், சாலைகளை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனர்களை அகற்ற, ஆணையர் அர்பித் ஜெயின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி பேனர்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பெருந்துறை ரோடு, பவானி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.இதில் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த, 250க்கும் மேற்பட்ட தட்டி போர்டு, பிளக்ஸ் போர்டு, இரும்பு, தகர போர்டு, மரங்களில் ஆணி அடித்து வைத்திருந்த பிளாஸ்டிக் அட்டைகளையும் அகற்றி வாகனத்தில் ஏற்றி சென்றனர்.இதேபோல் பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லுரி, பஸ் நிறுத்தங்களில் விதிமீறி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களையும் அகற்றினர்.