ADDED : செப் 30, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு-பவானி ரோட்டில் சாலை விரிவாக்கப்-பணி, 53 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகி-றது. இதில் மூலப்பட்டறை பகுதியில் இருந்து கே.என்.கே.ரோட்டுக்கு திரும்பும் கார்னரில் சாலையின் இருபுறமும் உள்ள சாக்கடையை இணைத்து தரைப்பாலம் கட்டும் பணி கடந்த, 10ம் தேதி துவங்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
மாநகரின் பிரதான சாலைகளின் ஒன்றாக உள்ள நிலையில், இரண்டு வாரத்துக்கு மேலாகியும் பணி நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்படுகிறது. பணி-களை துரிதப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
