/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்
/
பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்
பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்
பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்
ADDED : அக் 03, 2024 06:57 AM
பெருந்துறை: பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரையுடன் மண் பானை மற்றும் மண் அடுப்பும் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என, குலாலர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது.
ஈரோடு மாவட்ட அளவிலான கல்வி பரிசளிப்பு விழா, பெருந்துறை அடுத்த, பெத்தாம்பாளை-யத்தில் நேற்று நடந்தது. அறக்கட்டளை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கனகராஜ் வரவேற்றார். பொருளாளர் ராஜ்குமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி, மண்பாண்ட தொழில் செய்து வருபவர்-களுக்கு கலைமுதுமணி பட்டம் வழங்கி, மாநில தலைவர் நாராயணன் கவுரவித்தார்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதும் மண்பாண்ட தொழில் செய்வோர் குளங்களில் இலவசமாக களிமண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி. இலவச பொங்கல் தொகுப்-புடன் மண்பானை மற்றும் அடுப்புகளை கொள்-முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும். மண்பாண்ட தொழில் செய்வோருக்கு இலவச மின் சக்கரம் மற்றும் அதற்கான மின்சாரம் இல-வசமாக வழங்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.