/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காமராஜர் கல்வெட்டை சீரமைக்க கோரிக்கை
/
காமராஜர் கல்வெட்டை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 03, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, த.மா.கா., சார்பில் மாநில துணை தலைவர் விடியல் சேகர் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது:
கொடுமுடி பஸ் ஸ்டாண்டில், 1975 ஜூன், 5ல் முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா கல்வெட்டு உடைந்து சிதிலமடைந்துள்ளது. அத்துடன் பஸ் ஸ்டாண்ட் உட்பகுதியில் குப்பை, கழிவு குவிந்து சுகாதாரமின்றி காணப்படுகிறது. பயணியர் நிற்பதற்கு போதிய நிழல், இருக்கை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.