/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடையில் தங்க நகை திருடிய கில்லாடி பெண்ணுக்கு காப்பு
/
கடையில் தங்க நகை திருடிய கில்லாடி பெண்ணுக்கு காப்பு
கடையில் தங்க நகை திருடிய கில்லாடி பெண்ணுக்கு காப்பு
கடையில் தங்க நகை திருடிய கில்லாடி பெண்ணுக்கு காப்பு
ADDED : ஜூன் 09, 2025 04:44 AM
பவானிசாகர்: பவானி சாகர் நகைக்கடையில் குழந்தையுடன் வந்து, கவரிங் நகையை வைத்து விட்டு, மூன்று பவுன் தங்க சங்கிலியை திருடிச்சசென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஜெயலட்சுமி ஜுவல்லரி உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன் நகை வாங்க, கையில் குழந்தையுடன் வந்த ஒரு பெண், தான் கொண்டு வந்த கவரிங் நகையை வைத்து விட்டு, மூன்று பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றார். நகை சரிபார்ப்பு சோதனையில், திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து 'சிசிடிவி' காட்சிகள் ஆதாரத்துடன், நகை கடை உரிமையாளர் தரப்பில், பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது. நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பவானிசாகரை அடுத்த உத்தண்டியூரை சேர்ந்த காகித தொழிற்சாலை ஊழியர் ராஜசேகர் மனைவி ராதிகாவை பிடித்து விசாரித்தனர். இதில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். ராதிகாவை நேற்று கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: புதியதாக நகை போட்டிருந்த மனைவியிடம் கணவர் ராஜசேகர் விசாரித்துள்ளார். அப்போது தனது பாட்டி வாங்கி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மனைவி இப்படி ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, கணவரை அதிர்ச்சி அடைய வைத்தது. அதே சமயம் ராதிகாவுக்கு இதுதான் முதல் திருட்டு. முதல் சம்பவத்திலேயே அவர் வசமாக சிக்கிவிட்டார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.