ADDED : மார் 06, 2024 02:17 AM
ஈரோடு:ஈரோட்டில், லிப்டில் சிக்கிய மூன்று பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஈரோடு,
பெருந்துறை சாலையில், அகில் ப்ளாசா என்ற பெயரில் மூன்று தளங்கள் கொண்ட
நிறுவனம் உள்ளது. முதல் தளத்தில் எச்.டி.எப்.சி. வங்கி
செயல்படுகிறது. ப்ளாசாவில் லிப்ட் வசதி உள்ளது. வங்கி மேலாளர் தினேஷ்
குமார், 36, ஊழியர் சண்முக பிரியன், 24, மற்றும் சங்கர் பொன்னுசாமி,
26, ஆகியோர் நேற்று மாலை, 3:30 மணியளவில் தரை தளத்தில் இருந்து முதல்
தளத்துக்கு லிப்ட்டில் ஏறினர். 10 அடி உயரத்தில் முதல் தளம் இருந்தது. 5
அடி உயரம் சென்றதும் லிப்ட் நின்றது.
இதனால் மூவரும் லிப்ட்டில்
சிக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
3:45 மணிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி, லிப்ட்
சக்கரத்தை கைகளால் தள்ளி லிப்டை மேலே வர செய்து மூவரையும் பத்திரமாக
மீட்டனர்.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக, லிப்ட்டில் பழுது ஏற்பட்டு இருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

