/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளி சடலம் வாய்க்காலில் மீட்பு
/
தொழிலாளி சடலம் வாய்க்காலில் மீட்பு
ADDED : மார் 09, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர், நம்பியூர், பவர் ஹவுஸ் மேட்டை சேர்ந்த முருகன் மகன் ரமேஷ், 30, கட்டட தொழிலாளி. நண்பர்கள் இருவருடன் நடுப்பாளையம் எல்.பீ.பி., வாய்க்காலில் நேற்று முன்தினம் மாலை குளித்தார். நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதிக்கு சென்றபோது ரமேஷ் மாயமானார். நம்பியூர் போலீசார், தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி கைவிடப்பட்டது.
நேற்று காலை தீயணைப்பு துறையினர் தேடிய நிலையில், மாயமான இடத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் ரமேஷ் சடலம் கிடைத்தது. சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பினர்.

