/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு
/
ஈரோடு மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு
ஈரோடு மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு
ஈரோடு மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு
ADDED : செப் 19, 2024 08:10 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு, நாள் அதிக-ரித்து வருகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாக-னங்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நேரத்தில் கன-ரக வாகனங்கள் நுழைய தடை விதித்து,
ஈரோடு எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காலை, 8:00 முதல் பகல் 11:00 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரையும் கனரக வாகனங்கள் ஈரோடு மாநகருக்குள் நுழையக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு பலகை, கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் நேற்று முன்-தினம் மாலை வைக்கப்பட்டது.ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போக்கு-வரத்து போலீசார், சோதனை சாவடியின் பேரிகார்டரில் அறிவிப்பு போஸ்டரை ஒட்டினர். குறிப்பிட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் நுழையக்கூடாது என்றும், விதிமுறை மீறி நுழைந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.