தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஓய்வு பெற்ற பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்

ஓய்வு பெற்ற பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்

ஓய்வு பெற்ற பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்


ADDED : அக் 15, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் ஜான்கென்னடி, முருகையா ஆகியோர் பேசினர்.

பிற அரசு துறை ஓய்வூதியர்களை போல, போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கும், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். காப்பீடுக்காக பயனாளியிடம் மாதம், 644 ரூபாய் பிடித்தும் செய்து, முன் காப்பீடு தொகையான, 7,728 ரூபாயை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். நிதித்துறை அவ்வாறு செலுத்தவில்லை. முன் காப்பீடு தொகையையும் ஓய்வூதியர்களே செலுத்த தயார் என நீதிமன்றத்தில் அதிகாரிகள் சங்கம் தெரிவித்து, ஒய்வூதியர்களை வஞ்சித்துள்ளனர்.

முறையான மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாததால் ஓய்வு பெற்ற அலுவலர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு பெற இயலாமல் சிரமப்படுகின்றனர். அரசாணைக்கு புறம்பாக செயல்படும் பொறுப்பாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us