ADDED : ஏப் 19, 2024 06:34 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பறக்கும் படையினர் தணிக்கையில், பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இதுவரை, 90 லட்சத்து, 26,707 ரூபாய், ஈரோடு மேற்கில், 94 லட்சத்து, 81,890 ரூபாய், மொடக்குறிச்சியில், 9 லட்சத்து, 85,870 ரூபாய், பெருந்துறையில், 44 லட்சத்து, 35,970 ரூபாய், பவானியில், 31 லட்சத்து, 76,400 ரூபாய், அந்தியூரில், 13 லட்சத்து, 5,250 ரூபாய், கோபியில், 51 லட்சத்து, 75,050 ரூபாய், பவானிசாகரில், 1 கோடியே, 3 லட்சத்து, 42,406 ரூபாய் என, 4 கோடியே, 39 லட்சத்து, 74,543 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால், 3 கோடியே, 26 லட்சத்து, 39,203 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். மீதி, 1 கோடியே, 13 லட்சத்து, 35,340 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

