/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தில் மறுசீராய்வு: தி.மு.க., தேர்தல் தயாரிப்பு குழுவிடம் வலியுறுத்தல்
/
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தில் மறுசீராய்வு: தி.மு.க., தேர்தல் தயாரிப்பு குழுவிடம் வலியுறுத்தல்
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தில் மறுசீராய்வு: தி.மு.க., தேர்தல் தயாரிப்பு குழுவிடம் வலியுறுத்தல்
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தில் மறுசீராய்வு: தி.மு.க., தேர்தல் தயாரிப்பு குழுவிடம் வலியுறுத்தல்
ADDED : பிப் 13, 2024 12:21 PM
ஈரோடு: கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தில் மறுசீராய்வு செய்ய, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் விசைத்தறியாளர்கள் மனு வழங்கி வலியுறுத்தினர்.
'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் லோக்சபா தேர்தலுக்காக தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, எம்.பி., கனிமொழி தலைமையில் செயல்படுகிறது. இக்குழுவிடம் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் கந்தவேல் தலைமையிலான நிர்வாகிகள், மனு வழங்கி கூறியதாவது:
விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழகத்தில் உள்ள, 6 லட்சம் விசைத்தறிகளை நம்பி உள்ள, 30 லட்சம் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்துகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், விசைத்தறிகளுக்கு, 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கிய நிலையில், தற்போதைய, தி.மு.க., ஆட்சியில், 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை பாதியாக குறைத்தும் உள்ளது. தமிழகத்தின் ஜவுளி தொழிலை இந்தியா மட்டுமின்றி, உலகத்துக்கே எடுத்து காட்டாக விளங்கும் அளவுக்கு உயர்த்தும் திட்டங்களை லோக்சபா தேர்தலுக்கு முன் நிறைவேற்றி தர வேண்டும்.
குறிப்பாக, கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தில் மறுசீராய்வு செய்து, 11 ரகத்தில் இருந்து, 5 ரகமாக குறைக்க மத்திய அரசை வலியுறுத்த, தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து, அதை நிறைவேற்றி பார்லிமென்ட்டுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
தமிழக விசைத்தறியாளர்கள் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு பெற, தமிழகத்தில் அனைத்து துறைகளின் சீருடைகளையும், விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம், விசைத்தறிகளில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதா விசைத்தறிகளை நாடா இல்லா விசைத்தறிகளாக மேம்படுத்த வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். விசைத்தறிக்கென தனி ரக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு கேட்டு கொண்டனர்.