/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடுப்பூசி போட்ட நிலையில் பலி குழந்தை உடலை பெற மறுத்து சாலை மறியல்
/
தடுப்பூசி போட்ட நிலையில் பலி குழந்தை உடலை பெற மறுத்து சாலை மறியல்
தடுப்பூசி போட்ட நிலையில் பலி குழந்தை உடலை பெற மறுத்து சாலை மறியல்
தடுப்பூசி போட்ட நிலையில் பலி குழந்தை உடலை பெற மறுத்து சாலை மறியல்
ADDED : ஜன 26, 2025 04:06 AM
பவானிசாகர்: பவானிசாகரை அடுத்த இக்கரை தத்தப்பள்ளியை சேர்ந்த கவு-தம்-அசின் தம்பதியின் மூன்று மாத பெண் குழந்தை டிக்னா. வெள்ளியம்
பாளையம் புதுாரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்-தைக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வீட்டுக்கு சென்ற நிலையில் குழந்தை இறந்தது. பவானிசாகர் போலீசில் பெற்றோர் தரப்பில் புகாரளித்தனர். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை நேற்று நடந்தது. இதையடுத்து அங்கு சென்றிருந்த குழந்தையின் பெற்றோர், உறவினர்கள், இறப்புக்கான காரணத்தை கூறினால் மட்டுமே, உடலை வாங்குவோம் என்றனர்.
உடலுறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் கழிந்த பிறகே, உடற்கூறு பரிசோதனை அறிக்கை கிடைக்கும் என்று, பவானிசாகர் போலீசார் தெரிவித்தனர். இதனால் உடலை வாங்க மறுத்து, ஊரான இக்கரை தத்தப்பள்-ளிக்கு சென்று விட்டனர். அங்கு சென்ற நிலையில், சத்தி-கொத்த-மங்கலம் சாலையில் இக்கரை தத்தப்பள்ளி பிரிவில், சாலை மறி-யலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது. போலீசார் பேச்சு-வார்த்தையை தொடர்ந்து, மறியலை கைவிட்டனர். திடீர் மறி-யலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனாலும், குழந்தையின் உடலை பெற மறுத்ததால், போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

