/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 15, 2024 10:57 AM
ஈரோடு: ஈரோடு நான்கு சாலை சந்திப்பு பகுதியான ஸ்வஸ்திக் ரவுண்டானா பகுதியில், நேற்று காலை ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமை வகித்தார். டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்வோர் சீல் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்தி வாகனங்களை இயக்கக் கூடாது. சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. சமூக ஆர்வலர் ஒருவர், எமன் போல் வேஷமிட்டு கையில் பாசக்கயிறுடன், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களையும், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்களையும் நிறுத்தி அறிவுரை வழங்கினார்.