/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்டர் மீடியனால் முளைத்த சாலையோர கடைகள் மணிக்கூண்டில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்
/
சென்டர் மீடியனால் முளைத்த சாலையோர கடைகள் மணிக்கூண்டில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்
சென்டர் மீடியனால் முளைத்த சாலையோர கடைகள் மணிக்கூண்டில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்
சென்டர் மீடியனால் முளைத்த சாலையோர கடைகள் மணிக்கூண்டில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்
ADDED : அக் 31, 2025 02:07 AM
ஈரோடு, ஈரோடு மாநகரில் முக்கிய போக்குவத்து பகுதியாக திகழும் மணிக்கூண்டு நடுவே சென்டர் மீடியன்களை பயன்படுத்தி, கடந்த காலங்களில் சாலையோரம் பழம், காய்கறி, துணிக்கடைகளை அமைத்தனர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்டர் மீடியன் அகற்றப்பட்டு, டி.வி.எஸ்., வீதி ஒரு வழி பாதையாக்கப்பட்டது. மணிக்கூண்டு வழியே நேதாஜி சாலைக்கு வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஓரளவுக்கு குறைந்தது. சாலையோர கடைகள் முற்றிலும் அகற்றப்பட்டு பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி கூட்ட நெரிசலை காரணம் காட்டி சாலை நடுவே சென்டர் மீடியன் வைக்கப்பட்டது. அப்போது சென்டர் மீடியைன ஒட்டி துணிக்கடைகள் அமைக்க  அனுமதிக்கப்பட்டது. தீபாவளி  முடிந்த பின் சென்டர் மீடியன் அகற்றப்பட்டு, மீண்டும் போக்குவரத்துக்கு சாலை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வரை சென்டர் மீடியனும் அகற்றப்படாமல், கடைகளும் செயல்படுவதால், போக்குவரத்து நெரிசல் தலைதுாக்கியுள்ளது.இதுகுறித்து வாகன
ஓட்டிகள் கூறியதாவது:
டி.வி.எஸ்.வீதி வழியே ப.செ.பார்க் சிக்னலுக்கு செல்ல முடியாமல் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.  வாகனங்கள்  மணிக்கூண்டு வழியே நேதாஜி சாலை செல்ல  முன்பு அனுமதிக்கப்பட்டது.  ஆனால் சென்டர் மீடியன் போட்டதால், வாகன நெரிசல் உள்ள  பகுதியில், ௧ கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டி உள்ளது. சென்டர்  மீடியன்களை போட்டு சாலையோர  கடைகளை மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகளே ஊக்குவிக்கின்றனர்.
ஏற்கனவே  இருந்தது போல் மணிக்கூண்டு பகுதியில் சென்டர் மீடியன்களை அகற்றி, போக்குவரத்து நெரிசலை  குறைக்க  வழி செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

