ADDED : நவ 18, 2026 06:50 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை
யூனியன் வாய்ப்பாடியில் சென்னியப்பன் தோட்டம் அருகே, சேவல் சண்டை
சூதாட்டம் நடப்பதாக, சென்னிமலை போலீசாருக்கு நேற்று தகவல்
கிடைத்தது.
எஸ்.ஐ., தவுபிக் தலைமையிலான போலீசார் சோதனையில்
ஈடுபட்டனர். சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி
வளைத்தனர். பெருந்துறை குள்ளம்பாளையம் தாமோதரன், 22, பூவேந்திரன்,
31, ஆகியோரை சேவலுடன் கைது செய்தனர். கம்பளியம்பட்டி
காசிப்பிள்ளாம்பாளையம் நாகராஜ் தப்பி விட்டதாகவும், அவரை தேடி
வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
