சென்னை சில்க்ஸ் குழுமம் சார்பில் ஈரோட்டில் ரவுண்டானா அமைப்பு
சென்னை சில்க்ஸ் குழுமம் சார்பில் ஈரோட்டில் ரவுண்டானா அமைப்பு
ADDED : ஜூலை 26, 2026 06:00 AM
ஈரோடு:ஈரோடு
ஆர்.கே.வி., சாலையில் இயங்கி வரும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை மற்றும் தி
சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில், பல்வேறு சமூக நலத்திட்டங்கள்
மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் ஆர்.கே.வி.சாலையை
மெருகூட்டும் வகையிலும், போக்குவரத்து சீரமைப்புக்கும், ஸ்ரீகுமரன்
தங்கமாளிகை எதிரே புதிய ரவுண்டானா அமைக்கப்பட்டது. இதன் திறப்பு
விழா நேற்று நடந்தது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணபிரான்
தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு மாவட்ட
காவல்துறை, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மாவட்ட காவல் துணை
கண்காணிப்பாளர் தங்கவேல், டவுன் இன்ஸ்பெக்டர் இளங்கோ ரிப்பன் வெட்டி
ரவுண்டானாவை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர். இந்த
ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று, மக்கள் மற்றும்
அப்பகுதி வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
