ADDED : ஜூலை 26, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை
அருகே நெருஞ்சிப்பேட்டை, வடக்கு காடு கரும்புத்தோட்டம் பகுதியை
சேர்ந்தவர் பெரியசாமி, 50; இவருக்கு சொந்தமான நிலத்தில், சட்ட
விரோதமாக கரும்பாறைகளை உடைத்து விற்பனைக்கு எடுத்து செல்வதாக
அந்தியூர் வருவாய் துறையினருக்கு தகவல் போனது.
வருவாய் துறையினர்
சோதனைக்கு சென்றபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு டிப்பர்
லாரியில், பாறைகளை விற்பனைக்காக எடுத்து செல்வது தெரியவந்தது.
டிரைவர் தப்பி விட்டதால், லாரியை பறிமுதல் செய்த வருவாய் துறையினர்,
அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
