ADDED : ஏப் 12, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் நேற்று முன்தினம் வரை, 1.76 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருந்தனர்.
நேற்று இரு தொகுதியில், ஒரு லட்சத்து, 92,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனால், ஒரு கோடியே, 78 லட்சத்து, 18,810 ரூபாயானது. உரிய ஆவணங்களை வழங்கியதால், ஒரு கோடியே, 71 லட்சத்து, 97,610 ரூபாயை திரும்ப ஒப்படைத்தனர்.
