/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.21.74 லட்சம் காணிக்கை
/
பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.21.74 லட்சம் காணிக்கை
பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.21.74 லட்சம் காணிக்கை
பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.21.74 லட்சம் காணிக்கை
ADDED : ஏப் 30, 2025 01:40 AM
கோபி::
கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் வகையறா கோவில்களில் உள்ள, ௧௦ நிரந்தர உண்டியல், நான்கு திருவிழா உண்டியல் உட்பட, 14 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
காலை, 11:30 மணிக்கு தொடங்கிய பணி, மாலை, ௬:௧௫ மணிக்கு முடிந்தது. தனியார் கல்லுாரி, மாணவ, மாணவியர், நுகர்வோர் அமைப்பினர், காணிக்கை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் தங்கம், 51.400 கிராம், வெள்ளி, 440 கிராம், அமெரிக்கா டாலர், 31, இங்கிலாந்து ரூபாய், 120 பவுண்ட் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. தவிர, 21.74 லட்சம் ரூபாய், ரொக்கமாக கிடைத்தது.
கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், பாரியூர் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். கடந்த, 2024 டிச.,18ல், உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், 11.56 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.