/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.90 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.90 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 31, 2024 04:24 AM
ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மதியம் வாகன சோதனை நடத்தினர். இதில், அவ்வழியாக வந்த காரில், சூளகிரி அடுத்த காருபாலாவை சேர்ந்த குமார், 38, என்பவர், 50,000 ரூபாய் மதிப்புள்ள, 137 சட்டைகளை, உரிய ஆவணமின்றி பெங்களூருவில் இருந்து, சூளகிரிக்கு கொண்டு சென்றது தெரிந்தது. அதை பறக்கும் படையினரிடம் பறிமுதல் செய்து, ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியங்காவிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், தளி சட்டசபை தொகுதி பறக்கும் படையினர், அந்தேவனப்பள்ளியில் நேற்று பொலிரோ காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 92,000 ரூபாய் இருந்தது. வாகனத்தில் வந்த அஞ்செட்டி அடுத்த சீங்கோட்டையை சேர்ந்த சரத்குமார், 30, என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
* பர்கூர் அடுத்த குருவிநாயனப்பள்ளியில் நேற்று தேர்தல் பறக்கும்படை அலுவலர் சாந்தி தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது குப்பம் சாலையில் வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில், காரில் வந்த பெங்களூருவை சேர்ந்த சையத் அமீர், 54, உரிய ஆவணங்கள் இன்றி, 98,000 ரூபாய் எடுத்து சென்றதால், அதை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் தாசில்தார் திருமுருகனிடம் ஒப்படைத்தனர்.

