/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வடமாநில இளைஞரிடம் ரூ.40 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா?
/
வடமாநில இளைஞரிடம் ரூ.40 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா?
வடமாநில இளைஞரிடம் ரூ.40 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா?
வடமாநில இளைஞரிடம் ரூ.40 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா?
ADDED : அக் 16, 2024 07:28 AM
பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை இன்ஸ்பெக்டர் தெய்வராணி மற்றும் போலீசார், பெருந்துறை, பஸ் ஸ்டாண்டில் நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ்களிலும் சோதனை மேற்கொண்டனர். கோவைக்கு சென்ற பஸ்சில் சந்தேகத்துக்கு இடமாக, டிராவல் பேக்குடன் அமர்ந்திருந்த, ஒரு இளைஞரிடம் விசாரித்தனர்.
பேக்கில், 40 லட்சம் ரூபாய் இருந்தது. இதனால் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் வாசம்புரா, சிரிகியை சேர்ந்த ஹய்மா ராம், 25, என்பது தெரிந்தது. கோவையில் இருந்து சென்று ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் ஒருவரை சந்தித்து, அவர் கொடுத்த டிராவல் பேக்கை பெற்றுக் கொண்டு, மீண்டும் கோவைக்கு செல்வதாக தெரிவித்தார். பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு- செய்துள்ளனர். அதேசமயம் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.