ADDED : ஜூலை 08, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு ஆர்.டி.ஓ.,வாக பணி செய்த சிந்துஜா, கடந்த மாதம், 12ம் தேதி கோபி ஆர்.டி.ஓ.,வாக மாற்றப்பட்டார்.
இந்நிலையில்
ஈரோட்டில் சப் கலெக்டராக பயிற்சி பெற்று வந்த காஞ்சன் சவுத்ரி, கோபி
ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். சிந்துஜாவுக்கு வேறு
பொறுப்பு வழங்கப்படவில்லை.
தென்காசி தாசில்தார் சுடலைமணி,
ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரியாக,
விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், ஈரோடு தமிழ்நாடு மாநில வாணிப
கழகம் (சில்லறை விற்பனை) மாவட்ட மேலாளராக மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
