/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கள் இயக்க ஒருங்கிணைப்பு குழு காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம்
/
கள் இயக்க ஒருங்கிணைப்பு குழு காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம்
கள் இயக்க ஒருங்கிணைப்பு குழு காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம்
கள் இயக்க ஒருங்கிணைப்பு குழு காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 25, 2025 01:11 AM
காங்கேயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நேற்று காலை, கள் இயக்க ஒருங்கிணைப்பு குழு விவசாயிகள் சார்பாக, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள் இயக்க ஒருங்கிணைப்பு குழு, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்தார். பச்சை துண்டு அணிந்தும், கழுத்தில் பதாகை மாட்டிக் கொண்டும், பனை ஓலையை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும். கள் மீதான தடையை நீக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை ஊக்குவிப்பதை காட்டிலும், மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் கள்ளுக்கு அனுமதி அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி முழக்கமிட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.