/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானியில் நாளை பாக்கு விற்பனை துவக்கம்
/
பவானியில் நாளை பாக்கு விற்பனை துவக்கம்
ADDED : டிச 19, 2024 01:28 AM
ஈரோடு, டிச. 19-
ஈரோடு மாவட்டம், பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாளை (20ம் தேதி) பாக்கு நேரடி ஏல விற்பனை துவங்க உள்ளது.
விவசாயிகள் தங்களிடம் உள்ள பாக்கு பழம், காய்ந்த பாக்கு காய், சாலி பாக்கு, ஆப்பி பாக்குகளை விற்பனைக்கு கொண்டு வரலாம். விற்பனைக்கு வரும் பாக்குகளை ரகம், அளவு, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் தரம் பிரித்து கொண்டு வர வேண்டும். விவசாயிகள், தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். முன்பதிவு, உறுப்பினர் சேர்க்கை ஏதுமில்லை. அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். பாக்கு விற்பனைக்கு எவ்வித கட்டணம், கமிஷன் வசூலிக்கப்படாது. கூடுதல் தகவலுக்கு, 99444 47261 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். இத்தகவலை, ஈரோடு வேளாண் விற்பனை குழு செயலாளர் சாவித்திரி தெரிவித்துள்ளார்.

