/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.20.30 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை
/
ரூ.20.30 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை
ADDED : செப் 25, 2025 02:12 AM
ஈரோடு, மொடக்குறிச்சி, உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 60,000 தேங்காய்கள் வரத்தானது. கறுப்பு தேங்காய் ஒரு கிலோ, 68.16 முதல், 73.46 ரூபாய்க்கும், பச்சை காய், 52.52 முதல், 65.45 ரூபாய்க்கும், தண்ணீர் வற்றிய காய், 103.07 ரூபாய்க்கும் விலை போனது.
மொத்தம், 23,898 கிலோ தேங்காய், 15 லட்சத்து, 54,656 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், 125 கிலோ வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 216 முதல், 232 ரூபாய், இரண்டாம் தரம், 102 முதல், 206.86 ரூபாய்க்கு விலை போனது. மொத்தம், 2,231 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 4 லட்சத்து, 75,931 ரூபாய்க்கு விற்பனையானது.தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, 20 லட்சத்து, 30,587 ரூபாய்க்கு விற்பனையானது.