/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆயுத பூஜைக்காக காய்கறி, பழங்கள் விற்பனை தீவிரம்
/
ஆயுத பூஜைக்காக காய்கறி, பழங்கள் விற்பனை தீவிரம்
ADDED : அக் 10, 2024 03:32 AM
ஈரோடு: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளையும், நாளை மறுதினம் விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால், ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்-கெட்டில் நேற்று காய்கறி, பழங்களின் விற்பனை அமோகமாக நடந்தது.
குறிப்பாக, பூஜையில் வைத்து வழிபடுவதற்கான ஆப்பிள், கொய்யா, மாம்பழம், வாழைப்பழங்களை அதிகமாக வாங்கி சென்றனர். நேற்று ஒரு கிலோ ஆப்பிள்-120 ரூபாய், மாதுளை-200, திராட்சை-100, கொய்யா-60, சாத்துக்குடி-70, ஒரு தேன்வாழை-4 முதல், 5 ரூபாய்க்குவிற்பனையானது.
தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகளுக்கு திருஷ்டி சுற்றி உடைப்பதற்காக, வெள்ளை பூசணி, தேங்காய் ஆகியவற்றை ஆர்-வத்துடன் வாங்கி சென்றனர். வெள்ளை பூசணி ஒரு கிலோ-20 ரூபாய், தேங்காய், 25 முதல், 50 ரூபாய் வரை விற்பனையா-னது.பிற காய்கறிகள் ஒரு கிலோ மஞ்சள் பூசணி -25 ரூபாய், வெண்டைக் காய்-45, கொத்தவரங்காய்-40, கத்திரி-35, முள்-ளங்கி-40, பாகற்காய்-40, புடலை-40, பீர்க்கன் காய்-50, பீன்ஸ்-120, கேரட்-60, பீட்ரூட்-60, உருளை (ஊட்டி)-70, சாதா உருளை-45, குடை மிளகாய்-60, பச்சை மிளகாய்-50, மேரக்காய்-30, கோவக்காய்-30, காளிபிளவர்-50, மாங்காய்-100, வெள்ளரி-60, சுரைக்காய்-15, அவ-ரைக்காய்-120, சின்ன வெங்காயம்-50, பெரிய வெங்காயம்-60, மல்லி ஒரு கட்டு-15, புதினா-7 ரூபாய் என்ற விலையில்
விற்பனையானது.