ADDED : அக் 23, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்கன்று நடும் விழா
புன்செய் புளியம்பட்டி, அக். 23-
புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள, 489 ஏக்கர் பரப்பிலான காவிலிபாளையம் குளக்கரையில், மரக்கன்று நடும் விழா, விளாமுண்டி ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். முன்னதாக குளக்கரையில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள், இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. வேம்பு, பூவரசன், வேங்கை உள்ளிட்ட பலவகை மரக்கன்று நடப்பட்டது. பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, யூனியன் சேர்மன் சரோஜா, வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

