சமத்துவபுர நாற்றுப்பண்ணையில் வீணாகி வரும் மரக்கன்றுகள்
சமத்துவபுர நாற்றுப்பண்ணையில் வீணாகி வரும் மரக்கன்றுகள்
ADDED : நவ 10, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
கோபி; கோபி யூனியன் அயலுார் பஞ்சாயத்து நாமக்கல்பாளையம் அருகே சமத்துவபுரத்தில் நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மலைவேம்பு, தாண்றி, அத்தி என பல வகையான ரகங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்று வளர்க்கப்பட்டுள்ளது.
பாலித்தீன் கவர்களில் பசுமையாக, செழிப்பாக வளர்ந்துள்ள மரக்கன்றுகள் வீணாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலமாக இருப்பதால், மரக்கன்றுகளை முறையாக பலன் தரும் வகையில் நடவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து அயலுார் பஞ்சாயத்தில் விளக்கம் கேட்டதற்கு, அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை. கோபி யூனியன் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
