/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறை நிரப்பும் போராட்ட ஆயத்தமாக இடைநிலை ஆசிரியர் உண்ணாவிரதம்
/
சிறை நிரப்பும் போராட்ட ஆயத்தமாக இடைநிலை ஆசிரியர் உண்ணாவிரதம்
சிறை நிரப்பும் போராட்ட ஆயத்தமாக இடைநிலை ஆசிரியர் உண்ணாவிரதம்
சிறை நிரப்பும் போராட்ட ஆயத்தமாக இடைநிலை ஆசிரியர் உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 27, 2025 01:03 AM
ஈரோடு, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், ஈரோட்டில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. ஈரோடு மாவட்ட செயலாளர் அசோக் குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் வேல்முருகன், சி.பி.எஸ். ஒருங்கிணைப்பாளர் வெங்கட் பங்கேற்றனர்.
தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிப்படி, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, செப்டம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆசிரியர்களை ஆயத்தப்படுத்தும் விதமாக உண்ணாவிரதம் நடந்தது.
இதில் நுாற்றுக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். காலை, 10:00 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கி மாலை, 5:00 மணிக்கு நிறைவு பெற்றது.