/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வினாத்தாளுக்கு பாதுகாப்பு
/
இ.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வினாத்தாளுக்கு பாதுகாப்பு
இ.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வினாத்தாளுக்கு பாதுகாப்பு
இ.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வினாத்தாளுக்கு பாதுகாப்பு
ADDED : ஆக 14, 2025 02:36 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், தனி தேர்வர்களுக்கான இ.எஸ்.எஸ்.எல்.சி., (8ம் வகுப்பு) தேர்வு 18ல் துவங்கும் நிலையில், வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக அரசு தேர்வு துறை, 12.5 வயது பூர்த்தியானவர்கள் தனி தேர்வராக இ.எஸ்.எஸ்.எல்.சி.,(8ம் வகுப்பு) தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தி இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் தனி தேர்வராக எழுத, 168 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு வரும் 18ல் தமிழ் மொழி பாடத்தில் துவங்கி ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, 22 வரை தேர்வு நடக்கிறது. ஈரோடு சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டும் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு வினாத்தாள் கடந்த, 10ல் ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தனி அறையில் (ஸ்டாங் ரூமில்) வினாத்தாள்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.