/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டீக்கடைகளில் 'குட்கா' விற்பனை: 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
/
டீக்கடைகளில் 'குட்கா' விற்பனை: 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
டீக்கடைகளில் 'குட்கா' விற்பனை: 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
டீக்கடைகளில் 'குட்கா' விற்பனை: 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
ADDED : அக் 28, 2025 01:44 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட நசியனுார் சாலையில் உள்ள, 13க்கும் மேற்பட்ட கடைகளில், 'குட்கா' எனப்படும் புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என்று, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வெட்டுக்காட்டு வலசில் இரண்டு டீக்கடைகளில் புகையிலை பொருள் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்து, இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் தலா, 25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர். புகையிலை பொருட்கள் மீண்டும் பிடிபட்டால், கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.* பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில் ஒரு பெட்டிக்கடையில், பெருந்துறை போலீசாருக்கு நேற்று சோதனை நடத்தினர். இதில் குட்கா விற்பது தெரிய வந்தது. கடையில் ஒரு கிலோ 'குட்கா' பறிமுதல் செய்தனர். கடைக்காரர் ராமசாமியை, 27, கைது செய்தனர்.