ADDED : ஏப் 27, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, பா.ஜ., சார்பில் தாராபுரத்தில் நேற்று கருத்தரங்கு நடந்தது.
திருப்பூர் மாவட்ட தலைவர் மோகனபிரியா தலைமை வகித்தார். இன்றைய தலைமுறையினருக்கு, அம்பேத்கர் பற்றிய பல தகவல்களை, மாநில பொது செயலாளர் பாலகணபதி எடுத்துக் கூறினார். கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார், மாநில இளைஞரணி செயலாளர் யோகி, நகரத் தலைவர் ரங்கநாயகி உட்பட பலர் பங்கேற்றனர்.

