/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செங்கோட்டையன் பேட்டியில் தெளிவில்லை; பா.ஜ., நயினார்
/
செங்கோட்டையன் பேட்டியில் தெளிவில்லை; பா.ஜ., நயினார்
செங்கோட்டையன் பேட்டியில் தெளிவில்லை; பா.ஜ., நயினார்
செங்கோட்டையன் பேட்டியில் தெளிவில்லை; பா.ஜ., நயினார்
ADDED : நவ 08, 2025 04:58 AM
காங்கேயம்:வந்தே
மாதரம் பாடலின், 150ம் ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு
வருகிறது. இதன்படி காங்கேயம் அருகே படியூரில் தனியார் கல்வி
நிறுவனத்தில், இந்த விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் தெற்கு மாவட்ட
பா.ஜ., பொருளாளர் ருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
மாநில தலைவர்
நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து
பள்ளி குழந்தைகளுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மாநில பொது
செயலாளர் முருகானந்தம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா,
பள்ளி ஆசிரியர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பிறகு நிருபர்
சந்திப்பில் அவர் கூறியதாவது: செங்கோட்டையன் கொடுத்த பேட்டியை
பார்த்தேன் அதில் சரியான தகவல் இல்லை. யாரை பார்த்தார், என்ன பேசினார்
என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. அந்த ஆறு பேர் யார், யாரிடம்
சொன்னோம் என்று இல்லை. இதுபற்றி கருத்து கூற இயலாது. விஜய் இன்னும் ஒரு
கவுன்சிலர் கூட ஆகவில்லை.
எனக்கும் தி.மு.க.,வுக்கும் தான் போட்டி என
சொல்வது விந்தையாக இருக்கிறது. கோவை சம்பவத்தில் டி.எஸ்.பி., பையன்
இருக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். செங்கோட்டையன்
விவகாரத்தில் தி.மு.க., பின்னணியில் உள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு கூறினார்.
* ஈரோடு மாவட்டம் சிவகிரி பஸ்
ஸ்டாண்ட் அருகில், திருப்பூர் குமரன் சிலை முன், பா.ஜ., சார்பில் வந்தே
மாதரம் பாடல், ௧௫௦ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக
மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி தலைமையில், தேசிய
ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்றனர். பின் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக
வந்து, திருப்பூர் குமரன் சிலை, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள், மக்கள் திரளாக கலந்து
கொண்டனர்.

