/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கலெக்டர் அலுவலகம் எதிரே அகற்றிய நினைவுத்துாண் பூங்கா முன் அமைப்பு
/
கலெக்டர் அலுவலகம் எதிரே அகற்றிய நினைவுத்துாண் பூங்கா முன் அமைப்பு
கலெக்டர் அலுவலகம் எதிரே அகற்றிய நினைவுத்துாண் பூங்கா முன் அமைப்பு
கலெக்டர் அலுவலகம் எதிரே அகற்றிய நினைவுத்துாண் பூங்கா முன் அமைப்பு
ADDED : பிப் 08, 2025 06:40 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரில், பெருந்துறை சாலை - சம்பத் நகர் சாலை பிரியும் இடத்தின் மையத்தில் சம்பத் நகரை அடையாளம் காட்டும் நினைவுத்துாண் இருந்தது. இத்துாணுடன் சிறிய அளவில் ரவுண்டானா, நீண்ட மையத்தடுப்பும் அமைந்தி-ருந்தது. இதனால் சம்பத் நகருக்குள் திரும்புவோர், சம்பத் நகரில் இருந்து பெருந்துறை சாலை மற்றும் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் நோக்கி செல்வோர் வாகனங்களை ஓட்ட சிரமப்பட்டனர்.
இவ்விடத்தில் சாலையை அகலப்படுத்தவும், நவீனமாக்கவும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்து,
துாணை அகற்ற உத்தர-விட்டார். இதன்படி நேற்று முன்தினம் இரவில் இத்துாண் அகற்-றப்பட்டு, அவ்விடத்தின் மையத்தடுப்பு சுவர்களும் அகற்றப்பட்டன. நீதிமன்றம் அருகே உள்ள பூங்கா எதிரே துாணை
நிர்மாணித்து, வழிகாட்டி போல் நேற்று காலை அமைக்கப்பட்டது.துாண் அகற்றப்பட்ட இடத்தில் விரைவில் சிக்னலும், சாலையின் இருபுறமும் வாகனங்கள் பிரிந்து
செல்ல முறையான அமைப்பும் ஏற்படுத்தவுள்ளனர். அவ்விடத்தில் உயர் கோபுர மின் விளக்கும்
அமைக்கப்படவுள்ளது.