/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கலை கல்லுாரியில் சக்தி இயக்கம் தொடக்க விழா
/
ஈரோடு கலை கல்லுாரியில் சக்தி இயக்கம் தொடக்க விழா
ADDED : ஜூலை 30, 2025 01:22 AM
ஈரோடு, ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி யு.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு, இளைஞர் சக்தி இயக்கம் தொடக்க விழா நடந்தது. இதில் கலெக்டர் கந்தசாமி தலைமை உரை நிகழ்த்தினார்.
அவர் பேசியதாவது: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலரான வெ.இறையன்பு, மிகப்பெரிய பொறுப்பில் இருந்தாலும் எளிமையாக நடந்து கொள்ள கூடியவர். எங்களை போன்ற இளம் அதிகாரிகளின் வழிகாட்டியாக திகழ்பவர் என்றார்
. மேலும், குரூப்-௪ தேர்வெழுதி அரசு பணியில் சேர்ந்து பின்னர் குரூப்-௧ தேர்வில் வெற்றி பெற்று, ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற தன் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, யு.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு, இளைஞர் சக்தி இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசியதாவது: தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும். நுாலகத்தில் நேரத்தை செலவிட வேண்டும். படிக்கும் போது குழு விவாதங்கள் மேற்க்கொள்ள வேண்டும். சமூக அக்கறையுடன் நற்பண்புகளை கற்றல் வேண்டும். எதை நோக்கும் போதும் அறிவியல் பார்வையில் அணுக வேண்டும். அரசியல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.விழாவில் கல்லுாரி தாளாளர் பாலுசாமி, தி முதலியார் எஜுகேசனல் டிரஸ்ட் தலைவர் ராஜமாணிக்கம், ஓய்வு பெற்ற பொருளாதாரத்துறை தலைவர் மணி, கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.