ADDED : மே 08, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை,பெருந்துறை அடுத்த, பாச்சாங்காட்டூர், வரப்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி சின்னம்மாள், 50. இவர், செவரங்காடு என்ற இடத்தில் வைத்துள்ள ஆட்டு பட்டியில், 26 செம்மறி ஆடுகளை அடைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் பட்டிக்கு சென்று பார்த்தபோது, அதில் இருந்த, 26 செம்மறி ஆடுகளில், 9 ஆடுகளை நாய்கள் கடித்ததில், ஒரு செம்மறி ஆடு இறந்து கிடந்தது. எட்டு ஆடுகள் காயமடைந்திருந்தது.
இதேபோல், பெருந்துறை அடுத்த, கம்புளியம்பட்டி, மூணாம்பள்ளி, தெற்காலதோட்டத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி, 65. இவர் வீடு அருகில் ஆட்டு பட்டி வைத்துள்ளார். அதில், 60 செம்மறி ஆடுகள் அடைத்துள்ளார். இதில், இரண்டு ஆடுகளை நாய்கள் கடித்து காயப்படுத்தி உள்ளது. இதுகுறித்து, பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.