/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பு.புளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை 'கிடுகிடு'
/
பு.புளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை 'கிடுகிடு'
ADDED : ஆக 08, 2025 01:06 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில், நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் ஆடு, மாடுகளை வாங்க, விற்க வந்தனர். நேற்று கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஆடு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட கிடா ஆடு, 12 ஆயிரம் முதல், 18 ஆயிரம் வரை விற்பனையானது.
ஆடி மாதம் என்பதால், கோவில் திருவிழாக்களில் நேர்த்திக்கடன் செலுத்த ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை, 2,000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. ஆட்டு கிடாய்களின் விலை 3,000 ரூபாய் வரை விலை உயர்ந்தது.
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 60 கன்றுகள், 23,000 முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள், 22,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில், முற்றிலுமான கலப்பின மாடுகள் விற்பனைக்கு வரத்தானது.
விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளை வாங்கி சென்றனர். பசுந்தீவனம் அதிகமாக கிடைப்பதாலும், பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்வதாலும், நடவுப்பணிகள் நடந்து வருவதாலும் மாடுகளை விற்பனை செய்வதிலும், மாடுகளை வாங்கி செல்வதிலும் விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வம் காட்டினர்.