ADDED : பிப் 16, 2026 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, விடுமுறை தின-மான நேற்று வழக்கம்போல், துாத்துக்குடி, கடலுார், ராமநா-தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 3.5 டன் மீன் மட்டுமே விற்பனைக்கு வந்தது.
சிவராத்திரி என்பதால் விற்பனை மந்தமாகவே இருந்தது. இதில் துாத்துக்குடியில் இருந்து, 2 ஷீலா மீன்கள் வந்திருந்தன. இவற்றின் எடை தலா, 15 கிலோ. ஒரு கிலோ, 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மெகா மீனை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

