/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உரக்கடையில் திருட்டு முயற்சியால் அதிர்ச்சி
/
உரக்கடையில் திருட்டு முயற்சியால் அதிர்ச்சி
ADDED : டிச 12, 2024 01:38 AM
ஈரோடு, டிச. 12-
நடுப்பாளையத்தில் உள்ள உரக்கடையில், மர்ம நபர்கள் திருட முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோட்டை அடுத்த நடுப்பாளையத்தில், ஸ்ரீபாலமுருகன் அக்ரோ ஏஜென்சி உள்ளது. இதை கோவில்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, பணம் வைக்கும் இரும்பு டேபிள் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதில் பணம் இல்லை. நேற்று முன்தினம் பெரும்பாலான போலீசார், திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்புக்கு சென்று விட்டனர். போலீசார் இல்லாததை அறிந்த, மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட களம் இறங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

