/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் அதிகரித்து வரும் அரிசி விலையால் அதிர்ச்சி
/
அந்தியூரில் அதிகரித்து வரும் அரிசி விலையால் அதிர்ச்சி
அந்தியூரில் அதிகரித்து வரும் அரிசி விலையால் அதிர்ச்சி
அந்தியூரில் அதிகரித்து வரும் அரிசி விலையால் அதிர்ச்சி
ADDED : பிப் 24, 2024 03:32 AM
அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில வாரங்களாக அரிசி விலை, தாறுமாறாக அதிகரித்து வருவதாக, மக்கள் தரப்பில் வருத்தம் எழுந்துள்ளது.
குறிப்பாக, 26 கிலோ எடை கொண்ட பொன்னி அரிசி, 1,400 ரூபாயில் இருந்து, 1,550 ரூபாயாக உயர்ந்து விட்டது. 900 ரூபாய் கொண்ட அரிசி, 1,120 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதனால் மூட்டையாக அரிசி வாங்கும் பலர், 26 கிலோ கொண்ட சிப்பமாக அரிசி வாங்குகின்றனர். இதனால் அரிசி விற்பனையும் சற்று குறைந்துள்ளதாக, கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்தியூர் மளிகை கடை வியாபாரிகள் சங்க தலைவர் குமார் கூறியதாவது: தஞ்சை போன்ற மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழையால், நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பல இடங்களில் விளைச்சல் பாதித்தது. அரவை மில்களுக்கு குறைந்த அளவிலான நெல்லே வருகிறது. இதனால் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு கூறினார்.