ADDED : அக் 21, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:பெருந்துறை,
கோவை ரோடு, கருக்கங்காட்டூரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் மோகன், 22;
ஈங்கூர் சிப்காட் மூன்றாவது கிராஸில் ஒரு நுாற்பாலையில் தொழிலாளியாக
வேலை பார்த்தார்.
நேற்றிரவு வேலை முடிந்து, யமஹா ஆர்-15 பைக்கில்
வீட்டுக்கு சென்றார். சிப்காட் மூன்றாவது கிராஸ் அருகே சென்ற போது,
முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதியது. இதில் தலையில் பலத்த
காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவரான
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜெகதாப்பை சேர்ந்த காந்தி, 28,
மீது, சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
