/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகனுக்கு திருமண ஏற்பாடு செய்த அக்காவுக்கு வெட்டு; தம்பி வெறி
/
மகனுக்கு திருமண ஏற்பாடு செய்த அக்காவுக்கு வெட்டு; தம்பி வெறி
மகனுக்கு திருமண ஏற்பாடு செய்த அக்காவுக்கு வெட்டு; தம்பி வெறி
மகனுக்கு திருமண ஏற்பாடு செய்த அக்காவுக்கு வெட்டு; தம்பி வெறி
ADDED : ஜூன் 03, 2025 01:37 AM
பவானி, பவானியை அடுத்த வரதநல்லுாரை சேர்ந்தவர் ஈஸ்வரி, 60; இவரின் தம்பி கண்மணி, 55; பவானி, சன்னியாசிபட்டியில் வசிக்கிறார். கண்மணியின் மகன் சிவராஜுக்கு, ஈஸ்வரியை பெண் பார்த்து, திருமண ஏற்பாடு செய்தார். வரும், ௬ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. தம்பியின் சம்மதத்தை பெறாமல், ஈஸ்வரி இந்த ஏற்பாடுகளை செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த கண்மணி, ஈஸ்வரி வீட்டுக்கு நேற்று மாலை வந்தார். தான் எடுத்து சென்றிருந்த கத்தியால், அவரது கழுத்தில் மூன்று முறை வெட்டினார். பிறகு கத்தியுடன் பவானி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஈஸ்வரி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அக்காவை தம்பி கத்தியால் வெட்டியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.