/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம்
/
சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம்
சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம்
சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம்
ADDED : ஜூலை 10, 2025 08:28 AM
ஈரோடு:  சிவகிரி இரட்டை கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி, கடந்த ஏப்., 28ல் கொலை செய்யப்பட்டனர்; நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், அரச்சலுாரைச் சேர்ந்த ஆச்சியப்பன், 48, மாதேஸ்வரன், 52, ரமேஷ், 54, மற்றும் திருட்டு நகையை உருக்கி கொடுத்த நகைக்கடை உரிமையாளர் சென்னிமலை ஞானசேகரன், 36, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி இரட்டை கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட எஸ்.பி., சுஜாதா கூறுகையில், ''இதே கொலையாளிகள் தான், பல்லடத்தில் நடந்த மூவர் கொலையிலும் ஈடுபட்டுள்ளனர். பல்லடம் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். எனவே, சிவகிரி கொலை வழக்கையும் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றிஉள்ளனர்,'' என்றார்.