/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலை தைப்பூச திருவிழா, தேர் முகூர்த்தக்கால் பூஜை
/
சிவன்மலை தைப்பூச திருவிழா, தேர் முகூர்த்தக்கால் பூஜை
சிவன்மலை தைப்பூச திருவிழா, தேர் முகூர்த்தக்கால் பூஜை
சிவன்மலை தைப்பூச திருவிழா, தேர் முகூர்த்தக்கால் பூஜை
ADDED : டிச 11, 2025 06:32 AM
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், சிவன்மலை சுப்ரமணிய
சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று தேரில் முகூர்த்தக்கால் பூஜை நடந்தது.
தைப்பூச தேர்திருவிழா பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முதல் நிகழ்வாக தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று இக்கோவிலில் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, முகூர்த்தக்கால் மீது புனிதநீர் தெளித்து, சந்-தனம் பூசி, மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 8:30 மணிய-ளவில் முகூர்த்தக்கால் மலையில் இருந்து படிகள் வழியாக கொண்டு வரப்பட்டு அடிவாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து தேரில் நான்கு பக்கங்களிலும் முகூர்த்தக்கால் நட்டு பூஜை செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.