/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த சாப்ட்வேர் நிறுவன அதிகாரி மாயம்
/
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த சாப்ட்வேர் நிறுவன அதிகாரி மாயம்
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த சாப்ட்வேர் நிறுவன அதிகாரி மாயம்
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த சாப்ட்வேர் நிறுவன அதிகாரி மாயம்
ADDED : செப் 21, 2025 01:21 AM
புன்செய்புளியம்பட்டி, கோவை, விளாங்குறிச்சி, சேரன்மாநகரை சேர்ந்தவர் ராம்குமார், 33; சாப்ட்வேர் நிறுவன அதிகாரி. நண்பர்கள் மூவருடன் காரில் பவானிசாகருக்கு நேற்று வந்தார்.
தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் ஓடுவதை கண்டு நான்கு பேரும் வாய்க்காலில் இறங்கி குளித்தனர்.
வாய்க்கால் நடுவே ஆழமான பகுதிக்கு சென்ற ராம்குமார், நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கி மாயமானார். தகவலின்படி சென்ற சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள், ராம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் கோவை தனியார் நிறுவன தொழிலாளி, வாய்க்காலில் குளித்த போது நீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்த கலெக்டர் கந்தசாமி, தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். நீரில் மூழ்கி மாயமான ராம்குமார் திருமணம் ஆனவர். அவர் மனைவி பல் டாக்டர் என்றும், போலீசார் தெரிவித்தனர்.