sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு சிலவரி செய்திகள்.....

/

ஈரோடு சிலவரி செய்திகள்.....

ஈரோடு சிலவரி செய்திகள்.....

ஈரோடு சிலவரி செய்திகள்.....


ADDED : மார் 12, 2024 04:46 AM

Google News

ADDED : மார் 12, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஞ்சல் குறைதீர் கூட்டம்

ஈரோடு: ஈரோடு அஞ்சல் கோட்டத்தின், மக்கள் குறை கேட்பு கூட்டம் வரும், 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. புகார், கோரிக்கைகளை, 22ம் தேதிக்குள், 'அஞ்சலக கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001' என்ற முகவரிக்கு அலுவலக வேலை நாட்களில் நேரில், தபாலில் அனுப்பலாம். மனுவில் புகார் குறித்த முழு விபரமும் இருக்க வேண்டும். உறை மீது, 'குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட வேண்டும்.

விபத்தில் இன்ஜினியர் பலிகோபி: கோபி அருகே மேவாணியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 27, சிவில் இன்ஜினியர்; டி.வி.எஸ்., ஸ்போர்ட் பைக்கில் தொட்டிபாளையம் என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு சென்றார். கோபியை சேர்ந்த மேகநாதன், 45, ஓட்டி வந்த பைக் மோதியதில், கார்த்திகேயன் பைக்குடன் விழுந்தார். அதேசமயம் பின்னால் வந்த லாரி மோதியதில், கார்த்திகேயன் மேலும் காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கார்த்திகேயனின் தந்தை ஆறுமுகம் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான கார்த்திகேயன் திருமணமாகாதவர்.

தேர்தல் புறக்கணிப்பு;பா.ஜ., நிர்வாகி புகார்

கோபி-

பவானி தாலுகா செரையாம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லையன், 54; கூலி தொழிலாளியான இவர், ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ., செயற்குழு உறுப்பினராக உள்ளார். கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பனிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது: கோபி யூனியன் பெருந்தலையூர் கிராமம் செரையாம்பாளையத்தில், தார்ச்சாலை அமைக்க ஜல்லி கொட்டினர். எட்டு மாதமாகியும் அடுத்தக்கட்ட பணி நடக்கவில்லை. இதனால் ஜல்லிக்கற்களின் மீது சறுக்கி விழுந்து பலர் விபத்தில் சிக்குகின்றனர். தார்ச்சாலை அமைக்காவிட்டால், மக்களை ஒன்று திரட்டி லோக்சபா தொகுதி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். மனுவை பெற்ற ஆர்.டி.ஓ., கண்ணப்பன், துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

1,159 தனி தேர்வர்கள்தேர்வெழுத அனுமதி

ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்கி ஏப்., 8ல் நிறைவு பெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 25,663 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களுக்காக, 116 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனி தேர்வர்களாக, 1,159 பேர் எழுத அனுமதி தரப்பட்டுள்ளது. 800 பேர் ஸ்கிரைபர் உதவியுடன் தேர்வெழுதவுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேர்வு அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை அலுவலர் உள்ளிட்ட பணிக்கான ஆசிரியர்கள், வரும் நாட்களில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மலையம்மன் கோவிலில்இன்று திருவிழா துவக்கம்

கொடுமுடி-

மகாகவி காளிதாசரால் பூஜிக்கப்பட்ட, கொடுமுடி மலையம்மன் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா இன்று தொடங்குகிறது. இன்றிரவு, 8:௦௦ மணிக்கு உற்சவம் நடக்கிறது. இதன் பிறகு தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். 20-ம் தேதி அதிகாலை அம்மன் எழுந்தருளல் நடக்கும். அன்று காலை, 9:15 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. அன்றிரவு பொங்கல் விழா நடக்கிறது. 22-ம் தேதி புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.

குடிநீர் கேட்டு முற்றுகைநம்பியூர்: நம்பியூர் பேரூராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட கல்லாங்காட்டுப்பாளையத்தை சேர்ந்த, 30க்கு மேற்பட்ட மக்கள், நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு கடந்த, 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று, தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் நடராஜிடம் முறையிட்டனர். பழைய குழாய், வால்வுகளால் அடிக்கடி பழுதாகிறது. விரைவில் சரி செய்து தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கவே, மக்கள் கலைந்து சென்றனர்.

கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக

பிசியோதெரபிஸ்ட் முறையீடுஈரோடு-

பவானி, பூக்கடை கார்னர், காவேரி தெருவை சேர்ந்தவர் சுபாஷ். மனைவி மற்றும் உறவினர்களுடன் வந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:

நான் கடந்த நான்காண்டாக பிசியோதெரபி கிளினிக் நடத்தி வருகிறேன். அப்பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சீட்டு போட்டேன். முழு தொகையும் செலுத்திய நிலையில், ஒரு லட்சம் ரூபாய்க்கு கந்து வட்டி போட்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்தார். இதுபற்றி பவானி போலீசில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், கிளீனிக் பூட்டை உடைத்து பொருட்களை எடுத்து சென்று விட்டனர். பொருட்களை எடுத்து சென்று, கொலை மிரட்டல் விடுத்த கந்து வட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us